Monday, October 15, 2012

பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகளின் கதை – பகுதி 1

பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகளின் கதை – பகுதி 1

தம்பி!, தமிழ்-ஹிந்து  வலைத் தளத்தில் என்னைப் பற்றி விக்கிரமாதித்தன் வேதாளத்திற்குச் சொல்வது போல ஏதோ கதை சொல்லியிருப்பதாகக் கேள்விப்பட்டேன். செத்த பாம்பை நாம் அடிப்பதில்லை , இருந்தாலும், இப்போது இந்தக் கூட்டம் திரும்பவும் திரண்டு , இணையத்தில் பரவி, ஆராய்ச்சி என்ற பெயரில் ஈரை எறும்பாக்கி,எறும்பை எருமையாக்கி, பேனைப் பெருமாளாக்கும் வேலை செய்து வருகிறது என்பதைக் கண்டு வருகிறேன்.அய்யகோ, தம்பி , இவர்களின் அறியாமையைப் பற்றி என் சொல்வேன்! இவர்கள் ,தங்கள் உண்மையான எதிரிகள் யார் என்று அறியாமல், இருட்டில் இருந்து கொண்டு தன்னுடைய --யைத் தானே நசுக்கிக் கொண்டிருக்கிறார்கள். அவர்கள் வெளிச்சத்திற்கு வந்து அவர்கள் வாழ்வில் வெள்ளி முளைக்கட்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் இந்தக் கடிதத்தை எழுதுகிறேன்.

/**“அட முட்டாள் வேதாளமேஒரு நாட்டையே முட்டாளாக்கிய ஒரு மனிதரைப் பற்றி ரொம்ப சீரியஸாக ஆராய்ச்சி செய்துகொண்டு அந்த முட்டாள் கும்பலில் ஒருவனாக ஆகிவிட்டாயேஉன்னையும் நீ கேட்கும் கேள்விகளையும் நினைத்தால் சிரிப்பை அடக்க முடியவில்லை. **/

தம்பி நாட்டை யார் முட்டாள் ஆக்கினார்கள் என்று நானிலத்தில் ஒரு குழந்தை கூட அறியும். ஒரு பெருச்சாளிக் கும்பல் இங்கு வந்தேறி நாட்டைக் குட்டிச் சுவராக்கியது என்று எல்லோருக்கும் தெரியும், ஆளும் மன்னன் எவன் ஆனாலும், அவன் பெயரில் அதிகாரம் செலுத்திக் கொண்டிருந்தது இந்த கும்பல்தான் என்பதை மறந்து விடாதே.

/** நீ சொல்வதெல்லாம் அரசாங்கம் மக்களின் வரிப்பணத்தை செலவு செய்து பள்ளி பாட புத்தகத்திலும் பொது ஊடகங்களிலும் செய்து வரும் பிரச்சாரம். உண்மைக்கும் நீ அடுக்கிய செய்திகளுக்கும் சற்றும் சம்பந்தமில்லை.என்றான்.**/

தம்பி,உன்னிடத்தில் பணம் வாங்கிக் கோவில் கட்டி, உன்னையேத் தெருக்கோடியில் நிறுத்தி வைத்த கும்பலடா அது.நம்முடைய கலைகளையும், வித்தைகளையும் இவர்கள் நம்மிடம் இருந்தே கற்றுக் கொண்டு, அதனைத் நமக்கே எட்டாமல் செய்தவர்கள். தகுதி இருப்பின் யார் வேண்டுமானாலும் ஆசிரியர் ஆகலாம், குரு ஆகலாம், உள்ளத்தில் அன்பு இருந்தால் யார் வேண்டுமானாலும் அந்தணன் ஆகலாம் என்று இருந்த நிலையை மாற்றி, (திருக்குறள்-30. அந்தணர் என்போர் அறவோர்மற் றெவ்வுயிர்க்கும் செந்தண்மை பூண்டொழுக லான்.“ பொருள்: அனைத்து உயிர்களிடத்திலும் அன்புகொண்டு அருள் பொழியும் சான்றோர் எவராயினும் அவர் அந்தணர் எனப்படுவார்.) தன் இனத்தில் பிறந்தவன் மட்டுமே, தகுதி படைத்தவன் என்று கதை கட்டிப் பிரச்சாரம் செய்த கூட்டமடா அது. தான் மட்டும் பிரம்மாவின் தலையில் பிறந்தவன் என்றும் , நாமெல்லாம் ஏதோ கடனுக்குக் காலில் பிறந்தவர்கள் என்றும் பிரச்சாரம் செய்தவன் அவன், எனவே , தம்பி அவன் பசப்பு வார்த்தையில் மயங்கி விடாதே.இந்தக் கரையான்கள், தாங்கள் இருக்கும் வீட்டையே அரித்துத் தின்பவை என்பதை மறந்து விடாதே.இவர்களுடைய துரோகத்தை இங்கு எழுதினால், இரண்டு லட்சம் பக்கங்கள் எழுதினாலும் தீராது.நீ , நான் எழுதிய நூல்களைப் படி, (http://www.arignaranna.net/ilakiyam_main.asp) தெளிவு பிறக்கும்.

/***ஆரம்பம் முதல் அண்ணாதுரைக்கு சுயநலக் கொள்கை ஒன்றுதான் இருந்தது. < -----> ஈவேரா ஜஸ்டிஸ் கட்சியை திராவிடர் கழகம் என்று பெயர் மாற்றம் செய்து தேர்தலில் போட்டியிடுவதில்லை என்று முடிவெடுத்தார். ஆனால் காங்கிரஸ் கட்சியினர் தொடர்ந்து ஆட்சியில் இருந்து பதவி சுகத்தை அனுபவிப்பது அண்ணாவையும் அவர் கோஷ்டியையும் வெறுப்பேற்றியது.
இதேதடாஉருப்படாத கட்சியாக இருக்கிறதே என்று அண்ணாவும் அவர் தம்பிகளும் அடுத்த சில வருடங்களில் (1948), வெளியேறினர்**/
தம்பி, 1949-ஆம் ஆண்டு தி.மு.க-வை உருவாக்கினோம்.எனக்குப் பதவிதான் முக்கியம் என்று நினைத்திருந்தால், தனிக்கட்சி துவக்கியிருக்க வேண்டியது இல்லை.நான் காங்கிரஸில் சேர்ந்து அதைச் சாதித்து இருக்கலாமே. மேலும் 1949-லேயே தி.மு.க ஆரம்பிக்கபட்ட போதிலும், ஒரு கட்சியாக எல்லா உள்-கட்டமைப்புகளும் இருந்த போதிலும்1952 பொதுத் தேர்தலில் தி.மு.க போட்டியிட வில்லை. தி.மு.க-வின் கருத்துக்களை ஏற்றுக்கொண்ட,தனித் தமிழ்நாட்டுக் கோரிக்கையை ஏற்றுகொண்ட சுயேச்சைகளுக்கு தி.மு.க ஆதரவளித்தது. தி.மு.க-வின் ஆதரவில் வெற்றி பெற்ற இந்த சுயேச்சைகள் துரோகிகளாக மாறிக் காங்கிரஸில் சேர்ந்துவிட்டனர்.மேலும் இராஜாஜியின் தலைமையிலான காங்கிரஸ், திமுகவைத் தொலைத்துவிட வேண்டி எல்லா வழிமுறைகளையும் கையாண்டது. (ஊழலை எதிர்த்த பாபா ராம்தேவ்,அன்னா ஹஜாரே போன்றோரை காங்கிரஸ் எவ்வாறு கையாண்டது என்பதை கண்கூடாகப் பார்க்கிறாயே). தேர்தல் அரசியலில் ஈடுபட்டால்தான் தன் இலக்கை அடைய முடியும் என்பதை உணர்ந்தபின்பு, 1957-ல் இருந்துதான் தி.மு.க தேர்தலில் கலந்து கொண்டது.

பதவிக்கு அலைந்தவன் அல்ல நான் என்பதை நீ அறிவாய். மன்னர் காலம் தொட்டு மக்கள் ஆட்சி வரை ஆட்சி நடத்தியது யார் என்பதை நீ அறிவாய். ஆங்கிலேயனின் அடிவருடிகளாக இருந்து அதிகாரம் செலுத்தியது யார் என்பதை நாடே அறியும். இரண்டாம் உலகப்போரில் ஹிட்லர் வெற்றி பெறுவது போல ஒரு நிலை ஏற்பட்டபோது அவசரம் அவசரமாக ஆங்கிலத்தைத் தூக்கி எறிந்து விட்டு ஜெர்மன் மொழி படிக்க அலைந்த கூட்டமடா இந்த பெருச்சாளிக் கூட்டம்.
/**
தனியார் துறை நிறுவனங்கள் வளராத வளரமுடியாத காலம் அது. அரசியல் கூட்டங்களுக்கு மிக எளிதாகவே கும்பல் கூடியது. மக்கள் கொள்கை முழக்கங்களில் மயங்கினார்கள். அப்போது கவிந்தது தான் திராவிட கழக இருட்டு. அன்றைய நிலையைப் சரியாக பயன்படுத்திக் கொண்டது அண்ணாதுரையின் அரசியல் தந்திரம். **/

தம்பி, 1962-க்குப் பிறகுதான் பெரும்பாலான அரசு நிறுவனங்கள் தமிழ் நாட்டில் உருவாகின. அதுவரை தனியார்தான் – காங்கிரசில் இருந்த பண முதலைகள்தான்– எல்லாத் துறையிலும் கோலோச்சிக் கொண்டிருந்தனர். தனி மனிதர்களின் கையில் ஆயிரக்கணக்கான ஏக்கர் நிலம் இருக்க பலர் கொத்தடிமைகளாக இருந்தனர்.பொருளாதார ஏணியில் ஏழைகளை ஏற விடாமல் நசுக்கிக் கொண்டிருந்த காலகட்டம் அது.பஞ்சத்தில் அடிபட்டுக் கிடந்த மக்களை எலிக்கறி தின்று பிழைக்குமாறு சொன்னார் இராஜாஜி. எனவே ஏற்கனவே தேவையான இருட்டு தமிழ்நாட்டில் இருந்தது. புதிதாக திராவிட இருட்டு வந்து மூடியது என்பது கற்பனைக் கதை.
/** “பெரிய தொழிற்சாலைகள்எல்லாம் யூதர்களிடமே இருந்தன. சர்வ கலாசாலைகளில் யூதர்களே. கலா மண்டபங்கள் அவர்கள் கரங்களிலே. புலவர்கள்யூதர்களே.பத்திரிகைத் தொழில் அவர்களுடையதே. விஞ்ஞானம்அவர்கள் சொத்து. சமதர்மம் அவர்களுடையது.செல்வம் அவர்களிடம். வறுமை ஜெர்மனியரிடம் – ஆதிக்கம் அவர்களிடம், அடிமைத்தனம்ஜெர்மனியரிடம்.ஆனந்தம் அவர்களிடம்,சோர்வு ஜெர்மனியரிடம். ஆகவே நான் யூதர்களை வெறுத்தேன். எனக்கு அரசியல் அதிகாரம் வந்தால் என் முதல் வேலை யூதர்களின் ஆதிக்கத்தைஒழிப்பதேயாகும், என ஹிட்லர் சுயசரிதையில் எழுதினார். **/

தம்பி, இங்கே ‘யூதர்கள்’என்ற வார்த்தையை எடுத்துவிட்டு ‘பெருச்சாளிகள்’என்று போட்டுப் படி. உண்மை தெரியும்.
/**
ஈவேராவின் திராவிடர் கழகத்திலிருந்து கொள்கைக்காக வெளிவந்த பின்னால் தாய்க் கழகத்தின்கொள்கைகள் ஒவ்வொன்றையும் கழற்றி விட்டுக் கொண்டே இருந்தார். “ஒன்றே குலம். ஒருவனே தேவன்”, “ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்” போன்ற அண்ணாவின்இறைக் கொள்கை விளக்கத்தில்தி.கவின் கடவுள் மறுப்பு கழன்றது.
**/
தம்பி , உன் வீட்டுக்குள் விஷப்பாம்பு புகுந்து விட்டால் நீ என்ன செய்வாய், கைக்கு எந்த ஆயுதம் கிடைக்கிறதோ அதை வைத்துத் தானே நீ போராடுவாய்?அந்த விஷப்பாம்பு நீ வழிபடும் சிலைக்குப் பின்னால் ஒளிந்து கொண்டால் நீ என்ன செய்வாய்?சிலையை உடைத்துப் பாம்பை நசுக்குவாய் இல்லையா? பாம்பை நசுக்குவதுதான் இலக்கு, இங்கே சிலை உடைப்பு என்பது கருவி / ஆயுதம்.அப்போதைக்கு அந்த ஆயுதம் தான் கைக்குத் தோதாக இருந்தது.இலக்கை நோக்கி முன்னேறு,கருவியிலேயே கவனம் வைத்தால் இலக்கை அடைய முடியாது என்று பெரியவர் ஒருவர் சொல்லி இருக்கிறாரே. பாம்பை அடித்த பின்னால் கருவியை மாற்ற வேண்டும் அல்லவா?கடவுள் மறுப்பு என்பது என்ன? மனிதனை மலத்துக்குள் அமுக்கிக் கொண்டு ஆண்டவனைத் தொழுவதில் என்ன பயன் ? கடவுள் மறுப்பு என்பது புதியது இல்லையே? புத்தர் காலத்தில் இருந்ததுதானே ? 'ஆண்டவன் மறுப்பும் ஆன்மீகமே' என்றொரு புத்தகமே உண்டுதானே ?
/**
1962தேர்தலில் ராஜாஜியுடன் கூட்டு வைத்தபோது பார்ப்பனர் எதிர்ப்பும் கழன்றது. அதே தேர்தலில் ஓட்டுக்காக தன் பெயரை வாக்காளர் பட்டியலில் அண்ணாதுரை முதலியார்என்று பதிவு செய்ய முயன்றதில் சாதி ஒழிப்பும் சந்தர்ப்பத்துக்கு கழற்றி விடப் பட்டது.
**/
தம்பி, சாதிப்பெயரைப் பயன்படுத்துவது திராவிட இயக்கங்கள் ஆட்சிக்கு வந்தபின்தான் படிப்படியாகக் கைவிடப்பட்டது. இந்தக் குற்றச்சாட்டுக்கு ஆதாரம் எதுவும் இல்லை. நான் வாக்காளர் பட்டியலில் முதலியார் என்று இட்டால்தான் நான் முதலியார் என்று மக்களுக்குத் தெரியுமா ? என்னுடைய சாதியை,என்னைக்காட்டிலும் அதிகமாகப் பயன்படுத்தியவர்கள் இவர்கள்தானேடா. தந்தை பெரியார் தன்னை நாயக்கர் என்று சொல்லிக் கொள்ளவில்லை, இவர்கள்தானேடா மூச்சுக்கு முன்னூறு தடவை ராமசாமி நாயக்கர் என்று சொல்லிக் கொண்டிருந்தனர்!! இன்னும் இந்தக் கூட்டம் மட்டும் அந்தப் பழக்கத்தைக் கைவிடவில்லை. விகடனில் கவிஞர் வாலி ‘நினைவு நாடாக்கள்’ என்ற ஒரு கட்டுரைத் தொடர் எழுதினாரே, அதில் தன் வாழ்க்கையில் சந்தித்த பலரைப் பற்றிச் சொல்லும்போது அவர்களுடைய சாதிகளைக் குறிப்பிடத் தவறுவதே இல்லை. சக்தி விகடனில் சித்தர்களைப் பற்றி ஒரு தொடர் வந்தது. ஒவ்வொரு சித்தரைப் பற்றிச் சொல்லும்போதும் மறக்காமல் அவர் என்ன ஜாதியில் பிறந்தார் என்பதையும் குறிப்பீட்டார்கள். இதைப்பற்றி மேலே விவரிப்பது இங்கு வேண்டாம் என்பதால் விட்டுவிடுகிறேன். கைப்புண்ணுக்குக் கண்ணாடி எதற்கு?
/****
அண்ணாவின் நாவல்கள் நாடகங்களைப் பற்றி கேட்டாய்.அண்ணாவை விட பல மடங்கு அதிகமாக நாவல்கள், கட்டுரைகள், நாடகங்கள் எழுதியவர்கள் இருக்கிறார்கள். சினிமாவிற்கு வசனம் எழுதுவதும், நாவல் எழுதுவதும் பெரிய சாதனை அல்ல. அதற்கு எல்லாம் பேரறிஞர் என்ற பட்டம் கொடுப்பது தகாது. இத்தனைக்கும் அண்ணா எழுதியதில் பலதும் சொந்த சரக்கல்ல பலவும் தழுவல்கள் தான்.
****/
தம்பி, இராமாயணத்தை வர்க்கு வரி காப்பி அடித்து இராஜாஜி,சக்கரவர்த்தித் திருமகன் என்று நூலை எழுதினார். அவர் பதவியில் இருக்கும்போது , அந்த நூலுக்குத் தனது செல்வாக்கைப் பயன்படுத்தி 1958-ல் சாகித்ய அகாடமி பரிசும் பெற்றார்.அதென்ன அவருடைய சொந்தச் சரக்கா ? காப்பி அடித்து எழுதிய அவருக்கே‘மூதறிஞர்’ என்று பட்டம் கொடுத்து முகம் இளித்துக் கொண்டு கிடந்தார்களே, மறந்து விட்டாயா ? மற்றொருவர் (சு. சமுத்திரம்)மாங்குமாங்கென்று தன் உயிரை மையாக்கி எழுதி 1990 சாகித்ய அகாடமி விருது பெற்றார். உடனே இந்தக் கும்பல் “சாகித்ய அகாடமியிலும் இட ஒதுக்கீடு” என்று கொக்கரித்ததே.மறந்து விட்டாயா?

/**யேல் பல்கலைக் கழகம் டாக்டர் பட்டம் எல்லாம் கொடுக்கவில்லை அது வெறும் புரளி.டூரிஸ்டுகள் போவது போல அண்ணாவும் பல்கலைக் கழகத்திற்குள் நுழைந்து விட்டு வந்திருக்கிறார் அவ்வளவு தான்.
**/
தம்பி,நான் யேல் பல்கலைக் கழகத்தில் டாக்டர் பட்டம் பெற்றேன் என்று கூறவில்லை. கட்டுரையாளர் தானாக இட்டுக்கட்டி தன்னைத் தானே சிறுமைப்படுத்திக் கொள்கிறார். அங்கே படிக்கப் போக வேண்டும் என்று G-MAT, GRE என்று எழுதிக் குவிக்கும் கூட்டமும் இருக்கிறது தானேடா, அப்படி இருக்கும்போது அங்கே மாணவர்களிடத்துப் பேசக் கூப்பிடுவது என்பது எளிதான காரியமா ?
[From Wikipedia: He proceeded on a world tour as an invitee of the Yale University's Chubb Fellowship Programme and was also a guest of the State Department in the U.S.A. in April–May 1968. He was awarded the Chubb Fellowship at Yale University, being the first non-American to receive this honour.[16] The same year he was awarded an honorary doctorate from Annamalai University ]
‘டூரிஸ்ட்’மாதிரி போய்விட்டு வந்தார் என்பது கட்டுரையாளரின் கயமத்தனத்தின் உச்சம். ஏன், இதை எழுதியவர் போய் விட்டு வருவதுதானே, எல்லோருக்கும் பொதுவான கோவிலில் உள்ளே விடாமல் தள்ளிய கூட்டம்தானேடா இது. அப்படி இருக்கும்போது தகுதி உள்ளவர்கள் போகும் பல்கலைக் கழகத்துக்கு நான் போய்விட்டு வந்ததில் இவருக்கென்ன வயிற்றெரிச்சல்?
/***


அண்ணாதுரையின் மனப் பிறழ்வுக்கு ஒரு உதாரணம் கம்பரசம் என்கிற அவரது புத்தகம். அந்த புத்தகத்தில் அவர் பனிரெண்டாயிரம் பாடல்கள் கொண்ட கம்பராமாயணத்தில் இருந்து ஒரு முப்பது நாற்பது பாடல்கள் மட்டும் எடுத்து எழுதி கம்பராமாயணம் மொத்தமும் ஆபாசம் என்று நிறுவ முயற்சித்திருக்கிறார்.
**/
தம்பி,இதற்கு விளக்கமாக கம்பரசம் என்ற நூலில் இருந்து ஒரு பகுதி (http://www.viduthalai.in/)தருகிறேன். (கொங்கை, அல்குல் இரண்டுக்கும் உனக்கு அர்த்தம் தெரியும் என நம்புகிறேன்)
ஒரு காட்சி:
இயல்வுறு செயல்வினாவா யிருகையு மெயினர் தூண்டத்
துயல்வன துடுப்பு வீசித் துவலை கண் மகளிர் மென்றூ
கயல்வுறு பரவை யல்கு லொளி புறத்தளிப்ப வுள்ளத்
தயர்வுறு மதுகை மைந்தர்க் கயா உயிர்ப் பளித்த தம்மா!


இராமன் காட்டுக்குச் சென்றதாலும் தசரதன் மரணம் எய்தியதாலும், அயோத்தியில் இருந்த வீரர்கள் அனைவரும் சோகத்துடன் வெம்பிக் கிடந்தார்கள். அவர்களின் சோகத்தைக் குறைப்பதற்காக கங்கையின் அக்கரைக்குப் படகில் சென்று இராமனைக்கண்டு திரும்புகிறார்கள். அந்த சமயத்தில் படகில் அவர்களுடன் சில பெண்களும் இருக்கிறார்கள். அப்போது வீரர்களின் மன அயற்சி இராமனைக் கண்டதால் தீர்ந்ததா இல்லை வேறு ஏதாவது காரணமா என்பதை இந்தப் பாடல் சொல்கிறது.
வீரர்கள் துடுப்பினை வேகமாகப் போடும்போது தெறித்து விழும் நீர்த் துளிகள் பெண்களின் மீது விழுகின்றன, அவர்கள் உடை நனைந்து அல்குல் (மறைவிடத்தின்)ஒளி தெரிகிறது. அதனைக் கண்டு வீரர்கள் தங்கள் மனச்சோர்வு நீங்கப்பட்டார்கள் என்பது இப்பாடலின் பொருள்.


காட்சி2:கம்பன் படம் பிடிக்கும் ஒழுக்கம்

அனுமனை இராவணனிடம் அகப் பட்ட சீதையிடம் தூது அனுப்புகிறான் இராமன். தன் மனைவி சீதை எப்படி எப்படியெல்லாம் இருப்பாள்? அவளை அடையாளம் கண்டுபிடிப்பது எப்படி என்பதுபற்றி இராமன், தூது செல்லும் குரங்காகிய அனுமனிடம் கம்பன் கூறும் காட்சி இதோ:

வாராழிக் கலசக் கொங்கை வஞ்சிபோல் மருங்குலாள் தன்
தாராழிக்கலைசார் அல்குல் தடங்கடற்கு உவமை தக்கோய்
பாராழி பிடரில் தங்கும், பாந்தமும் பணி வென்றோங்கும்
ஓராழித் தேரும் கண்ட உனக்கு நான் உரைப்பதென்ன?


இராமபிரான் சொல்கிறார் அனு மானிடம்: தக்கவனே, என் மனைவி சீதை இருக்கிறாளே, அவளுடைய கொங்கைகள் (மார்பகங்கள்) நிறைந்த குடம் போன்றன! அவளுடைய அல்குலோ (பிறப்புறுப்பு),சீரான வட்ட வடிவமான கடலுக்குஉவமை என்று.


உலகிலே உள்ள, எந்தப் பித்தனும் வெறியனுங்கூடத் தன் மனைவியின் கொங்கையையும் மறைவிடத்தையும், வேறொருவனிடம் வர்ணிக்கமாட்டான்.அங்ஙனம் வர்ணிக்கும் கதாநாயகனை எந்த நாட்டு இலக்கியத்திலும் எந்தக் கவியும் சித்திரிக்கவில்லை.ஹோமர் முதற் கொண்டு பெர்னாட்ஷா வரையிலே எடுத்துப் பாருங்கள்! மதனகாமராஜன் கதை முதற்கொண்டு மன்மத விஜயம் என்பன போன்ற காமக்கூத்து ஏடுகளையும்கூடப் பாருங்கள் .
சீதையின் உள் உறுப்புகளைக் கண்டுபிடிக்கும் வேலையை பிரம்மச் சாரியாகிய அனுமனிடம் ஒப்படைக் கிறான் கணவனாகிய இராமன்! என்னதான் கற்பனைவளம், இலக்கிய ரசனை என்றாலும் இப்படியா?
/** இதனால் சிறுமைப் படுவது கம்பன் அல்ல, அண்ணாதுரைதான். **/
இப்போது சொல், யார் சிறுமைப்படுவது? கம்பனுக்கு இது சிறுமை அல்லவா? கடவுளின் அவதாரம் என்று உரைத்துத் திரிகிறார்களே,அந்த இராமனுக்கு இது சிறுமை அல்லவா?
/** அண்ணாதுரைக்கும் ஒரு நடிகைக்கும் கள்ளத் தொடர்பு என்று ஊருக்கெல்லாம்தெரிந்து சட்ட சபையிலேயே கேள்வி எழுப்பப் பட்டது. கடமை கண்ணியம் என்றெல்லாம்ஊருக்கு உபதேசம் செய்த இந்த மகான் அதற்கு பதில் அளிக்கும் போது சொன்னது:“[......] ஒன்றும் படிதாண்டாபத்தினி அல்ல. நான் முற்றும் துறந்த முனிவன் அல்ல. [.........] என்பவள் ஒரு பேனா மைக்கூடு– அதை யார் வேண்டுமானாலும் பயன்படுத்தலாம்நானும் பயன்படுத்தினேன்”. கண்ணியம் என்பது அறவே அண்ணாவிடம் இல்லை என்பதற்கு இது ஒரு உதாரணம் மட்டுமே. **/
தம்பி,காந்தியை மகாத்மா என்று ஏன் சொல்கிறார்கள், ஏன் எனில்அவர் தான் செய்த காரியங்களை மறைக்காமல் ஒத்துக்கொண்ட துணிவு கொண்டிருந்ததுதான். தந்தையின் பிணம் வெளியே கட்டிலில் கிடக்கும்போது, பக்கத்து அறையில் கட்டிலில் மனைவியைப் புணர்ந்தேன் என்று ஒத்துக் கொண்டவர் அவர். தனது பிரம்மச்சரியத்தைச் சோதிக்கும் பொருட்டு இளம் பெண்களுடன் நிர்வாணமாகத் தூங்கினேன் என்று வெளிப்படையாக அறிவித்தவர் அவர். ஒரு மனிதன் தன் செயல்களை வெளிப்படையாக ஒப்புக்கொள்ளும் பக்குவம் உள்ளபோதுதான் அவன் பெரிய மனிதன். நான் பிரம்மச்சாரி என்று என்றுமே சொல்லவில்லையே, என் ‘கள்ளத்’தொடர்பு பற்றிக் கேள்வி எழுப்பும் இவர்களிடம் நான் ஒரு கேள்வி கேட்கிறேன்.
தன்னை பிரம்மச்சாரி என்று அறிவித்துக் கொண்ட ‘பெரிய’ மனிதர்‘அடக்க’ முடியாமல்‘காம’த்தைத் தேடி தெருக்’கோடி’ வரை ஓடிப் போனாரே. நாறிக் கிடந்தவரை நாசூக்காய், காதும் காதும் வைத்த மாதிரி திரும்பிக் கூட்டி வந்தார்களே!, கடவுளைக் காண்பிக்கிறேன் பேர்வழி என்று கூப்பிட்டுக் கலவியில் ஈடுபட்ட கதைகள் தான் நாடே அறியுமே, (http://suunapaana.blogspot.in/2009/08/blog-post.html) , திறந்த புத்தகமாய் வாழ வேண்டியவர் பல புத்தகங்களைப் படுக்கையில் போட்டுப் புரட்டினாரே, அங்கே போய் இவர்கள் கண்ணியத்தைப் பற்றிக் கேள்வி கேட்கட்டுமே ! இவர்கள் கண்ணியத்தைப் பற்றிப் பேசுவது கசாப்புக் கடையில் கறிவெட்டிக் கொண்டே ஜீவ காருண்யம் பேசுவது போல!

[தொடரும் ]

No comments:

Post a Comment