Monday, October 15, 2012

பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகளின் கதை – பகுதி 2

இக்கட்டுரையின் முதற் பகுதி :   பேரறிஞர் சொன்ன பெருச்சாளிகளின் கதை – பகுதி 1

(தொடர்ச்சி)

/**
பல தந்திரங்கள்செய்து ஆட்சியைப் பிடித்தபின்என்ன ஆனது என்றால், அண்ணாவின் ஆட்சியில்தான் கீழ்வெண்மணி என்கிற ஊரில் சாதி வெறியால் நாற்பது விவசாயக் குடும்பங்களைஉயிருடன் தீயிட்டு கொளுத்தப்பட்டார்கள். இவர்களின் சாதி ஒழிப்பு கொள்கைகளும்,ஆட்சியில் சட்டம் ஒழுங்கும்சிறந்து விளங்கிய லட்சணம் அது. **/

தம்பி , தேர்தலில் வென்றுதானே ஆட்சியைப் பிடித்தோம், இதில் தந்திரம் செய்ய என்ன இருக்கிறது? ஏன் இவர்கள் மந்திரம் சொல்லித் தடுத்து நிறுத்த வேண்டியதுதானே? கீழ் வெண்மணியில் நடந்தது(http://devendrarkural.blogspot.in/2011/12/blog-post_29.html ) ஒரு வர்க்கப்போராட்டத்தின் விளைவு, அது ஆழ்ந்த வருத்தம் தரும் விஷயம்தான். நான் ஆட்சிக்கு வந்து ஒரு வருடத்துக்குள் நிகழ்ந்தது அது. அதில் என்னைத் திணிப்பதும்,என்னை அதற்குப் பொறுப்பாக்குவதும் எப்படி நியாயம் ஆகும்? சாதியை நானா உருவாக்கினேன்?தலையில் பிறந்தவன், தோளில் பிறந்தவன், இடையில் பிறந்தவன், காலில் பிறந்தவன் என்று வருணத்தை உருவாக்கியது யார் ? அப்படி சாதியை உருவாக்கி,சாத்திரத்தைத் திரித்த திருட்டுப் பெருச்சாளிகளுக்கு இதில் எந்தப் பொறுப்பும் இல்லையா?
/**
இவ்வாறு பிழைப்பு நடத்தினாலும்அக்காலத்தில் தமிழகத்தில் அண்ணாவுக்குமயங்காதவர் குறைவே. **/

ஆஹா! மயக்குவதற்கு நான் என்ன மோகினியா? மயக்குவது, தவத்தைக் கலைப்பது என்பதெல்லாம், ‘நீயே எனக்குப் புருசனாக வா’ என்று இவர்களின் பெண்கள் (புருசனைப் பக்கத்தில் வைத்துக்கொண்டு ) பச்சையாக வேண்டிக்கொள்வார்களே அந்தக் கடவுளின்(?) வேலை.

/** நாடு முழுவதையும் முட்டாளாக்கிவிட்டு அண்ணா போய் சேர்ந்தார். **/

யார், நான் முட்டாள் ஆக்கினேனா? மூவாயிரம் வருடமாய் நம்மை முட்டாள் ஆக்கி வைத்த ஓநாய்க்கும்பல்,திடீரெனத் தன் பிடி தளர்வதைக் கண்டு போடும் வெறிக்கூச்சல்தானே இது?

/** தன் பிள்ளைகளுக்குபதவி என்றால் துள்ளி எழுந்து தில்லி சென்று மத்திய அரசை மிரட்ட முடிகிறது. ஆனால் இலங்கையில் தமிழன் இனமே அழிந்து கொண்டு இருக்க, அந்த மக்களை பற்றி சற்றும் கவலையின்றி, ஒப்புக்குமத்திய அரசுக்கு கடிதம் எழுதுவதும்,கொடநாட்டிலும்,கோவாவிலும் ஓய்வேடுப்பதுமாக அரசியல் வளர்ந்திருக்கிறது. **/

தன் பிள்ளைகள் நோகாமல் நுங்கு தின்ன வேண்டும் என்பதற்காக் சாத்திரங்களைத் திரித்து, பொய்யையும் புரட்டையும் உட்செலுத்தி, நாங்கள் மட்டுமே உட்கார்ந்து தின்போம், நீங்கள் எல்லோரும் போய் உழைத்து வந்து கொட்டுங்கள் என்று சட்டங்களை உருவாக்கியவன் யார், இந்த சொம்பேறிக் கூட்டம்தானேடா?
/**அண்ணாதுரையின் அரசு தான் லாட்டரி சீட்டுகளைஅரசு செலவில் “விழுந்தால்வீட்டுக்கு, விழாவிட்டால் நாட்டுக்கு”என்று பிரச்சாரம் செய்து விற்றது. **/

ஆராதனைத் தட்டிலே சில்லறை போடு,கடவுள் உனக்குக் கண் திறப்பார்,எடைக்கு எடை எனக்குப் பொருள் கொடு , கடவுள் உனக்குக் கருணை காட்டுவார், எனக்குச் சோறு போடு, புண்ணியம் சேரும் என்றெல்லாம் புளுகு மூட்டைகளை அவிழ்த்து விட்டுத் திரிவது மட்டும் லாட்டரி இல்லையா ?

/**கோஷ்டி மோதலும், தமக்கு பிடிக்காதவர்களை ரவுடிகளை விட்டு அடிப்பதும்,எதிர்ப்பவர்கள் வீட்டுக்கு ஆட்டோ அனுப்புவதுமான இன்றைய வளர்ச்சிக்கும் அண்ணாவின்அரசியலே ஆரம்பமாக இருக்கிறது. **/

யார் தலைமையில் ஆட்சி நடந்தாலும்,உண்மையாக ஆட்சியை நடத்துவது இந்தக் கும்பல்தான். இந்தியாவில் நடந்த, நடந்து கொண்டிருக்கிற எல்லாத் தீமைகளும் இவர்களிடம் இருந்தே தொடங்குகின்றன. தகழியின் ‘செம்மீன்’படித்திருக்கிறாயா?. இந்தியா சுதந்திரம் அடைந்தபோது அதுவரை ஆங்கிலேயனின் அடிவருடிகளாக இருந்த இவர்கள் திடீரென் தேசபக்தர்களாக மாறி, உண்மையானா தேச பக்தர்களை கோஷ்டி அரசியல் செய்து குழியில் தள்ளிய இரகசியம் புரியும்.

இன்றைய திமுகவின் செயற்பாடுகளை வைத்து அன்றைய காலகட்டத்தை மதிப்பிடுவதோ என்னுடைய செயல்களுக்கு தவறான விளக்கம் அளிப்பதோ எந்த விதத்திலும் ஏற்புடையது அல்ல. ஊழலையும், கொள்ளையையும் ஏற்படுத்தியது நான்தான்,திமுகதான் என்று கூறுவது முழுப்பூசணிக்காயை சோற்றில் மறைப்பது போல.உண்மை என்ன என்று எல்லோரும் அறிவார்கள். யார் இந்தியாவை அடகு வைத்தார்கள் என்பதை நாடறியும். சுதந்திரத்திற்குப் பின் ஒரு குடும்பம் நாட்டையே தன் சொத்தாக மாற்றிக் கொண்டது என்பதையும் நீ அறிவாய்.எப்போது கோவில் கருவறை இருட்டாக்கப்பட்டதோ , உன் கடவுளை அவர்கள் திருடிக்கொண்டார்களோ அப்போதே ஊழல் தொடங்கி விட்டது என்பதை உணர்ந்து கொள்.

/**சாதி ஒழிப்பு, கடவுள் மறுப்பு என்று எதையெல்லாம் எதிர்த்துகொள்கை முழக்கம் செய்தார்களோ,அதெல்லாம் நேர்மாறாக மிக அதிக வளர்ச்சி கண்டுள்ளது. சிறிய அரசாங்க பதவியிலிருந்து,மந்திரி பதவி வரை சாதி என்ன என்று தெரிந்த பிறகே பதவி ஒதுக்கப் படுகிறது.இட ஒதுக்கீடு, அதற்குள் இட ஒதுக்கீடு, அதனுள் உள் இட ஒதுக்கீடு என்று போய்க கொண்டிருக்கிறது.**/

அடடா? இவர்களுக்கு உடம்பில் எங்கே எரிகிறது என்பதற்கு இதுதானே சாட்சி!

/**இவ்வாறு விக்ரமன் பதிலுரைக்க, மூடர்கள் கையில் சிக்கி சீரழிந்து போய்க்கொண்டிருக்கிற தமிழ்நாட்டுக்கு சுடுகாடு மேல் என்று வேதாளம் பறந்தது. **/

தம்பி,இவர்கள், நம்மிடமே பிடுங்கித் தின்று விட்டு நடுரோட்டில் குசு விட்டுக்கொண்டு போய்க்கொண்டிருந்தார்கள்.நம்மைக் கண்டாலே தீட்டு என்று நாகரீகம் பேணி, நம்மை துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு சந்துக்களில் போக மட்டுமே அனுமதித்தார்கள். அப்படி இருக்கும் தமிழ்நாடுதான் பூங்கா என்று இவர்கள் நினைத்தால் எல்லோரும் எரிந்து சாம்பலாய் சமமாகிக்ப் போகும் சுடுகாடு எவ்வளவோ மேல். எனவே அப்படிப்பட்ட சுடுகாடாகத் தமிழ் தமிழ்நாட்டை ஆக்குவதுதான் நமது நோக்கமே.

சுடுகாட்டு எலும்புகளைச் சோதித்துப் பார்த்ததிலே 
வடநாட்டு எலும்புஎன்று வந்தஎலும்பு இல்லையடி
தென்னாட்டு எலும்புஎன்று தெரிந்தஎலும்பு இல்லையடி

எந்நாட்டு எலும்பென்றும் எழுதிவைக்க வில்லையடி
ஒருநாட்டு மக்களுக்குள் ஓராயிரம் பிரிவை 

எரியூட்ட வில்லைஎனில் எந்நாளும் துன்பமடி   
(இனமேது-4ஆம்தொகுதி)- கண்ணதாசன்
இன்னும் எவ்வளவோ எழுதலாம், ஆனால் இந்தக் கூட்டம் திருந்தப் போவதில்லை. ‘அப்னே பேர்மே குலாடி மார்னா’ என்றொரு பழமொழி இந்தியில் உண்டு. தன் காலில் தானே காயம் செய்து கொள்வது என்பது இதன் பொருள். அதன்படி இந்த ஏய்ப்பர்களின் கூட்டம்,தாங்கள் செய்து வந்துகொண்டிருந்த சீரழிவுகளை மறைத்துவிட்டு, ஏதோ இவர்கள்தான் தமிழ்நாட்டைக் காப்பாற்ற வந்திருக்கும் புண்ணிய ஆத்மாக்கள் போல வேஷம் போடுகிறார்கள்.

தம்பி,இவர்கள் பெரிய ஒழுக்கவாதிகள் போல எல்லோரும் சமம் என்று எழுதுவார்கள். கொஞ்சம் நெருங்கிப் போனால், சட்டையைத் திறந்து காட்டுவார்கள். (ரோட்டில் வரும் பைத்தியம் திடீரென ஆடை அவிழ்ப்பது போல), எனவே நீ எப்போதும் விழித்திரு.

தம்பி ஒன்றை நினைவில் கொள். அரிசி குடவுனில் புகுந்த பெருச்சாளிகள் போல இந்தக் கூட்டம் இன்கே பல்லாயிரம் வருடங்களாகத் தின்று கொழுத்து வருகிறது. எங்கே சந்து கிடைத்தாலும் நுழைந்து அங்கு மற்றவர்களை நசுக்கிக் கோலோச்சுவது இவர்கள் இயல்பு. இணையத்திலும் புகுந்து தவறான தகவல்களைக் கொடுத்து மக்களைத் திசை திருப்புவதும், தங்கள் மீது விமர்சனம் வரும்போது தனி மனிதத் தாக்குதலில் இறங்குவதும் இவர்களுக்குக் கைவந்த கலை. தனிப்பட்ட முறையில் இவர்கள் எப்படிப் பழகினாலும், தமிழ், தமிழ் நாடு என்று வரும்போது மட்டும் இவர்கள் மனதில் இருக்கும் சாக்கடையை வெளிப்படுத்தத் தயங்க மாட்டார்கள், ‘இவரா இப்படிப் பேசுகிறார்’ என்று சிலசமயம் நம்மை நினைக்க வைப்பார்கள்.
 
தம்பி, இவர்கள் தமிழ் என்பதும் இந்து என்பதும், அக்கறை காட்டுவதெல்லாம் ஒரு பூசி மெழுகல்தான்.

தமிழுக்கு ‘செம்மொழி’ அந்தஸ்து கொடுக்கப்பட்டபோது இந்த கும்பல் குய்யோ முறையோ என்று வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு புலம்பியது. நீ http://www.badriseshadri.in/2004/09/blog-post_29.html என்ற சுட்டியைப் படி, இவர்களுடைய அடிப்படைக்கட்டுமானம் புரியும். இதற்கு நீ அளித்த மறுவினை ஓடையில் (http://odai.blogspot.in/2004/05/blog-post_29.html) பத்திரமாக இருக்கிறதுதானே. இது தொடர்பான இந்தப் பதிவையும் படி http://paarvai.blogspot.in/2004/05/blog-post_29.html

தம்பி, இன்று இந்து மதத்தின் மறுமலர்ச்சி என்ற பெயரில் இவர்கள் திரும்பக் கிளம்பி இருக்கிறார்கள். இவர்களுக்காக, எவன் பெண்டாட்டியாவது பேராசைப்பட்டு சிக்கலில் மாட்டிக்கொண்டால், உன் சகோதரனின் பெண்டாட்டியின் தாலியை அறுத்து உதவி செய்ய நீ ஒன்றும் சுக்ரீவனைப் போன்ற வானரம் இல்லை.
இந்தக் கும்பலுக்குத் தேவைப்படுவதெல்லாம் ஒரு மூளையற்ற வானரப்படைதான்.இவர்கள் தமிழ் என்றும் ஹிந்து என்றும் தூண்டில் போடுவதெல்லாம் வானரப்படைக்கு ஆள் சேர்க்கத்தான்.அதை நினைவில் வை.
மேலோட்டமாகப் பார்த்தால், இவர்கள் இந்து மதத்தைக் காப்பாற்றும் கடமை வீரர்களாகத் தெரிவார்கள். (இந்து எனபதே ஆங்கிலேயன் என்ற வண்டு உருட்டிய மல உருண்டைதான்). இவர்கள் நடத்தும் பத்திரிக்கை,தொலைக்காட்சி எல்லாம் கூர்ந்து கவனித்தால் இவர்கள் இந்து மதத்துக்குள் ஒரு குறிப்பிட்ட கடவுளையும் அது சார்ந்த புனைவுகளையும் மட்டுமே தூக்கிப் பிடிப்பது தெரியும். ஆனால் இங்கே இருக்கும் சில அப்பாவி மூஞ்சூறுகளுக்கு இந்த உண்மை தெரியாது. இந்தப் பெருச்சாளிக் கூட்டம் தன் இனத்தைச் சேர்ந்த மூன்சூறுகளின் மீது ஏறி மூதிரம் பெய்யவும் தவறுவது இல்லை. இவர்களுக்குக் கடவுள், மதம் எல்லாம் பிழைப்பிற்கான வழி. இரமணரை ஆஹா ஓஹோ என்று புகழ்வார்கள், வள்ளலார், வாரியார் என்றால் முகம் சுழிப்பார்கள்., தியாகராஜர் என்பார்கள், திருநாவுக்கரசரை ஏற்க மாட்டார்கள்.கம்ப ராமாயாணம் என்பார்கள், சிலப்பதிகாரத்தைப் பற்றியோ பெரிய புராணத்தைப் பற்றியோ மூச்சு விடமாட்டார்கள். திருப்பாவை திருப்பாவை என்று அளப்பறை செய்வார்கள், திருவெம்பாவை குறித்து வாய்திறக்க மாட்டார்கள். தமிழ்நாட்டில் வாழும் இந்துக்களில் 95% நாட்டார் (குல) தெய்வங்களை வழிபாடும் செய்பவர்கள். ஆனால் இந்த நாட்டார் தெய்வங்களை இந்தக் கும்பல் ஏற்றுக் கொள்வதில்லை.
தம்பி, இன்றைக்கு நீ உட்கார்ந்து1950-ல் வெளிவந்த திரைப்படம் பார்த்தால் எப்படிப் பல காட்சிகள் பைத்தியக்காரத்தனமாக தோன்றுமோ அது போலவே சில வரலாற்று நிகழ்வுகளும் இருக்கும்.வரலாற்றை உண்மையான நோக்கத்தில் புரிந்து கொள்ள வேண்டுமெனில் நாம் நம் மனநிலையில் பின்னோக்கிப் பயணம் செய்து அந்தக் காலகட்டத்தில் இருந்த சூழ்நிலையை ஆராய்ந்து வரலாற்று நிகழ்வுகளைப் புரிந்து கொள்ள வேண்டும். எல்லா மனிதர்களும் பிறந்தது முதல் ஒரே கொள்கையைப் பிடித்துக் கொண்டு வாழ்வதில்லை. கால மாற்றத்திற்கு ஏற்றவாறு,தங்கள் அனுபவத்தின் மூலம் கற்ற பாடங்களால் மனிதர்கள் தங்கள் கருத்துக்களை மாற்றிக் கொள்கிறார்கள். இதில் தலைவர்களும் விதிவிலக்கல்ல.

இங்கே நான் குறிப்பிட விரும்புவது என்னவெனில் பெரியாரோ / நானோ , எங்களுடைய அரசியல் வளர்ச்சியானது சில குறிப்பிட்ட பெருச்சாளிக் கூட்டத்திடம் இருந்து மக்களை விடுவிக்க மட்டுமே ஏற்பட்டது. எங்களுடைய தாக்கம் ஒரு சுனாமி போல. அதில் பெருச்சாளிகளோடு சேர்ந்து சில மூஞ்சூறுகளும் பாதிக்கப்பட்டிருக்கலாம் மறுப்பதற்கில்லை.ஆனால் அந்த காலகட்டத்தில் - நேரத்தில் எங்களுடைய வரலாற்றுத் தேவை இருந்தது. அதை நீ மறந்து விடாதே.

ஆன்மீகம் என்பது ஒன்றுபடுதலை(Integration)நோக்கிய பயணம். ஆனால் இவர்கள் செய்வது Differentiation. இவர்கள் எப்படி புத்த மதத்தில் இருந்து நிறைய விஷயங்களை கிரகித்துக்கொண்டு அம்மததினரை தாழ்த்தப்பட்டவர்களாக மாற்றினார்கள் என்பதை அறிவோம். இன்னும் எத்தனையோ இருக்கிறது,நாறும் என்பதால் நாகரீகம் கருதி நிறுத்திக் கொள்கிறேன்.

உனக்குக் கடவுள் தத்துவத்தில் நம்பிக்கை இருந்தால் அந்தக் கடவுளை நீயே தேடிக் கண்டடை. அதுதான் வழி. இந்த ஏஜண்டுகளிடம் சிக்கிக் கொள்ளாதே. உன் முதுகில் ஏறி மூத்திரம் பெய்வதில் இவர்கள் கில்லாடிகள் என்பதை மறந்து விடாதே. இந்த கும்பலுக்கு அப்பாலும் இந்து மதம் இருக்கிறது , இவர்களுக்கு அப்பாலும் சுயநலமற்ற குருமார்கள் இருக்கிறார்கள் என்பதை மறக்க வேண்டாம். அவர்களைத் தேடிக் கண்டடை.
------------

No comments:

Post a Comment